Posts

Showing posts from August, 2017

மு.க ஸ்டாலினே போதும்

காலத்தின் கடுமையினை பொறுத்துதான்  தலைவர்கள் தமிழகத்தில் உருவாகுவார்கள் போல.. கடும் பிராமண அதிகார காலத்தில் பெரியார் உருவானார். குமாரசாமி ராஜா, ராஜாஜி காலத்தில் அண்ணா, கலைஞர், ஜீவா எல்லோரும் உருவானார்கள். இந்திரா காலத்தில் கலைஞர் மிக பெரும் எதிர்ப்பு சக்தியாக நின்றார். இப்படி இருந்த தமிழகத்தில் இந்த மோடி, அமித்ஷா, தமிழிசை, எடப்பாடி காலங்களுக்கு மு.க ஸ்டாலினே போதும் என காலம் முடிவு செய்திருக்கலாம்

உண்மைபேசும் ஒரே ஊடகம் ஜெயா டிவி !

அகில உலகிலே இந்த நொடியில் உண்மைபேசும் ஒரே ஊடகம் இந்த ஜெயாடிவிதான். யார் என்ன சொன்னாலும் இதனை என்னால் உறுதியாக சொல்லமுடியும், இப்பொழுது அதுதான் மகா உண்மையினை சொல்கின்றது அதாவது இந்தியாவில் மத்திய அரசும் சரியில்லையாம் , மாநில அரசு மகா மோசமாம். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாம். மாநில முதல்வருக்கு பொறுப்பே இல்லையாம், சுயநலத்தில் மாநில நலனை விட்டுவிட்டாராம். தமிழநலன் இந்த அரசால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றதாம். இப்படி மிக துணிவாக சொல்கின்றது ஜெயாடிவி தமிழகம் மகா மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளும் டிவி இன்று அதுதான். மக்களும் வந்து இது உருப்படாத ஆட்சி, உழல் ஆட்சி என ஒப்பாரி வைக்கின்றார்கள். இனி காட்சிகள் மாறினால் நிச்சயம் ஜெயா டிவி மாறும். ஆனால் இந்நொடியில் மகா உண்மையினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள் அதனால் பழனிச்சாமி முதல்வராக நீடிக்கும்வரை ஜெயா டிவி உண்மையினை சொல்லும் என்பதால் , ஆளுநர் வாழ்க என சொல்லிவிட்டு ஜெயா டிவி செய்திகளை கொஞ்ச நேரம் பார்க்கலாம். பழனிச்சாமி அகற்றபட்டால் அதன் பின் ஜெயா டிவி தன் பழைய பொய்களுக்கு திரும்பிவிடும். ஜெயா செய்தியினால் சாலையோரத்தில் ...

மிக மிக தடுமாறுகின்றார்

Image
வருகின்ற பல செய்திகள்படி சொல்வதென்றால், நாடு மோசமான நிலையினை எட்டிகொண்டிருக்கின்றது. ரூபாய் நோட்டு ஒழிப்பு இன்னபிற நடவடிக்கை எல்லாம் ஒரு விளைவினையும் ஏற்படுத்தவில்லை, மாறாக பல முன் தயாரிப்பில்லா பல திட்டங்கள் நாட்டை பல சிக்கல்களில் ஆழ்த்தியிருக்கின்றது தொழில் முடக்கம் ஏற்படுகின்றது, வேலை வாய்பில்லா சிக்கல் பெருகுகின்றது, பொருளாதாரம் சரிகின்றது. இது முன்பே சொல்லபட்ட விஷயங்கள்தான். இந்தியா மிகபெரிய நாடு, பெரும் மக்கள் தொகை உள்ள நாடு. எல்லா மாற்றங்களும் தேவைதான், ஆனால் அவையெல்லாம் ஒரே நாளில் மாறிவிடும் விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவைகளை மாற்றமுடியும் மாறாக மிக அவசரமாக மாற்றினால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும், இதன் கூட மாட்டுகறி இன்னபிற மதவாத கொடுமைகள் சேர்ந்தால் தேசம் நாசமாகத்தான் போகும். வருகின்ற தகவல்கள் அதனை உண்மையாக்குகின்றன. சோவியத் யூனியனை சீர்திருத்துவேன் என கார்பசேவ் செய்த சில அதிரடி நடவடிக்கைகள்தான் அந்த நாடே சிதற காரணமானது, சில கசப்பு மருந்துகளை ஓவராக கொடுத்தால் அப்படித்தான் உலகநாடுகள் இங்கு வந்து தொழில் தொடங்கவும், பல விஷயங்கள் கொண்டுவரவும் இங்கு அமைதியான ச...

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறை

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறையாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? எல்லா உணவையும் மாயா பஜார் ரங்கராவ் போல "ஹாஹ.. ஹாஹ.. ஹா" என ஒரு ரவுண்ட் வரவேண்டியதுதான். அப்படியே டிவியில் குஷ்பூ படத்தை ஓடவிட்டால் விடுமுறை சட்டென்று முடிந்துவிடும். குஷ்பூ நடித்த "ஜாதி மல்லி" படத்தில் இருந்து தொடங்குகின்றது விடுமுறை... ஆமாம்டா, அந்த விவேகம் படம் பாகுபலி வசூல் மட்டுமல்ல, டைட்டானிக் மற்றும் அவதார் படத்து வசூலை விட பல மடங்கு வசூலித்துவிட்டது என நம்பிக்கொள்கின்றோம் விட்டுறங்கடா.. இதே செய்தியினை எங்கு திரும்பினாலும் சொல்வதை தாங்க‌ முடியவில்லை. எல்லா நாட்டிலும் எல்லோரும் ஒரிஜினல் லைசென்ஸோடுதான் வாகனம் செலுத்துகின்றார்கள். அதனை கொண்டு சென்றால்தான் என்ன? கையடக்க பொருள்தானே அது? ஏடிஎம் கார்டு, பணம் இன்னபிற பொருட்களை கையில் எப்போதும் வைத்திருப்பவர்களுக்கு ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க முடியாதா? எதுவுமே முறைபடுத்த பட கூடாது என்பதில் இவ்வளவு அக்கறையா? ஏராளமானோர் லைசென்ஸ் இல்லாமல்தான் இதுகாலம் வண்டி ஒட்டி கொண்டிருந்திருக்கின்றான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது மன கோட்டை கட்டுகின்றார் கமல்...

தமிழகத்து சார்லி சாப்ளின் என்.எஸ் கிருஷ்னனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image
நெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்   தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் அவரும் வந்தார். எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதிதான் என்.எஸ்.கேவிற்கும் முதல்படம். அதுவரை தமிழ்சினிமா சீரியஸ் பாடலாக செல்லும், சிரிப்பு என்று பெரிதாக இருக்காது, அந்த சிரிப்பு காட்சிகளை சிந்திக்கும் விதத்தில் சொல்லும் நுட்பத்தை முதன் முதலில் தொடங்கியவர்தான் என்.எஸ் கிருஷ்ணன் இன்று காமெடிகள் என்பது குடிப்பது, இரட்டை அர்த்தம் , மகன் தாயினை மிரட்டுவது, புனிதமான ஆசி...

நாளை மலேசிய சுதந்திர தினம்

Image
நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது. அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது. இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான் மலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம். அதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து...

உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

சசிகலா மீதான வழக்குகளை காட்டி, தினகரன் மீதான வழக்குகளில் மிரட்டி, பன்னீரையும் பழனிச்சாமியினையும் பார்வையிலே கதறவைத்து பாஜக மிரட்டலாம் அதன் மூலம் அதிமுகவினை விரல் நுனியில் ஆட்டலாம் ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கினை, தயாநிதி மாறன் வழக்கினனை காட்டி கலைஞர் குடும்பத்தையும் மிரட்டி திமுகவினை ஆட்ட நினைத்தால் அக்குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுகவினை காக்க உண்மையான திமுகவினர் முன்வருவார்கள் எனறொரு குரல் எங்காவது கேட்கின்றதா என்றால் இல்லை உண்மையான திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்கும், ஆனால் தளபதி ஜால்ரா, கனிமொழி ஜால்ரா திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்காது. "ஏ ஆரிய பாஜகவே அக்குடும்பத்தை மட்டும் வேண்டுமானால் மிரட்டலாம், ஆனால் அவர்களின்றியும் திமுக இயங்கும். இது பகுத்தறிவு இயக்கம், பெரியார் ஏற்றிய நெருப்பு அண்ணா இன்றி அவர் குடும்பம் இன்றி இயங்கிய இந்த மாபெரும் நெருப்பு இயக்கம் கலைஞர் இன்றியும் அவர் குடும்பம் இன்றியும் இயங்கும், முடிந்தால் தொட்டுபார்" என்றொரு குரல் எங்காவது இருந்து வருமா என எதிர்பார்த்தால் வரவே இல்லை அதாவது உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை அதிமுகவில் இன்று தெரியும் பலகீனம...

அதிமுக அழிந்துவிட கூடாதாம் : திமுக

இப்பொழுதெல்லாம் சில திமுகவினருக்கு அதிமுக மீது பாசம் பொத்துகொண்டு வருகின்றது, அதிமுக அழிந்துவிட கூடாதாம். அது அழிந்தால் பாஜக வளருமாம் திமுக தீயாய் தன் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் பாஜக‌ எப்படி வளரும்? ஏன் பயம்? பகுத்தறிவினை பரப்ப உழைக்க வேண்டும் எனும் பயமா? இவ்வளவுதானா உங்கள் நம்பிக்கை? பாஜகவினை எதிர்க்க முடியாத அளவிற்கா திமுக பலம் கெட்டு போயிற்று? அப்படியா அஞ்சுகின்றீர்கள்? அப்படியானால் இது வீழ்ச்சி அல்லவா? கலைஞர் அதிமுக அழியவேண்டும் என விருப்படவே இல்லையாம், அவர் ரகசியமாக ஆதரித்தாராம். பின் என்ன மண்ணாங்கட்டிக்கு அவர்களை எதிர்த்து அரசியல் செய்தார்? தமிழக மக்களை கலைஞர் ஏமாற்றினார் என சொல்லவருகின்றீர்களா? ரகசிய ஆதரவென்றால் ஏன் மல்லுகட்டி  அந்த சொத்துகுவிப்பு வழக்கினை திமுக நடத்தியது என்றால் பதில் இல்லை. விட்டால் சசிகலா சிறையில் இருப்பதால் தன் தவறை எண்ணி கலைஞர் அழுது புலம்பி மவுனவிரதம் இருக்கின்றார் என சொல்லிவிடுவார்கள் போல.. அதிமுக அணிகள் இணையாவிட்டால் பல ரகசியங்களை வெளியிடுவேன் : கோவை எம்பி நாகராஜன் அய்யா, வெளியிடுவதே வெளியிடுகின்றீர்கள். அந்த எம்ஜிஆர் காலத்து ரகசியங்களயும் வெளியிடுங...

"ரொகிங்கியா" ஒழிக்கபடும் ஓர் இனம்.

Image
"ரொகிங்கியா" ஒழிக்கபடும் ஓர் இனம். அன்பிற்கும் அறத்திற்கும் உலகின் அடையாளமாய் ஜொலித்தது புத்தமதம், அசோகர் போன்ற பெரும் அரசர்களையே அது உள்வாங்கிற்று, இந்தியாவின் அம்பேத்கார் போன்ற மேதைகள் கூட விரும்பி ஏற்ற கொள்கை அல்லது மார்க்கம் அது. எந்தபுனிதமான மதமும் அரசியல் எனும் ஆதிக்கசக்திக்கு அடித்தளமானால் என்னென்ன விபரீத, மனிதகுல அழிவுகள் தோன்றும் என்பதற்கு வரலாறுமுழுக்க சுவடுகள் கிடக்கின்றன, இன்றளவும் மேற்காசியா அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது. மற்ற மதங்களை விட பொறுமையின் அடையாளமான புத்தமத நாடுகள் என தம்மை அறிவித்துகொண்ட நாடுகளான தெற்காசியாவின் வளமான பர்மாவும், சிலோனும் இன்று தரித்திர மியன்மாரும், லங்காவும் ஆகிவிட்ட பின்னரும், இன்னும் அம்மதத்தின் பிடியில் அரசியலில் சிக்கி, இன்னும் சீரழிய தயார் என பகீரங்கமாக அடம்பிடிப்பதுதான் புத்தருக்கே அத்தேசம் திருந்தாதா? என ஆசை வரும் முரண். புத்தசங்கங்களால் சீரழிக்கபட்ட இலங்கையும், அவர்களை எதிர்த்து கிளம்பிய ஈழபோராட்டம் திசைமாறி சென்றதும், அதனால் ஏற்பட்ட தமிழர் அழிவும் கடும் துயரமிக்கவை. லட்சகணக்கான மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கிவிட்டு இன்னும...

அதிமுகவினர் நூதன போராட்டம்

தினகரன் படத்தினை பார்த்து சிரிக்கும் போரட்டம் : காட்டுமன்னார் கோவில் அதிமுகவினர் நூதன போராட்டம் அதாவது இப்படி சிரித்து அவரை அவமானபடுத்துகின்றார்களாம் ராமசந்திரனின் படங்களை பார்த்தால், அவரின் நடனத்தையும், உதடு சுழிப்பினையும் பார்த்தால் வராத சிரிப்பா? ஜெயலலிதா நடிப்பு என கொல்வாரே, அதனை கண்டால் வராத சிரிப்பா? ராமசந்திரனின் அண்ணாயிச விளக்கத்தை பார்த்து வராத சிரிப்பா? ஜெயாவும் சசிகலாவும் ஆண்ட ஆட்சிபார்த்து வராத சிரிப்பா? அல்லது இப்பொழுது பன்னீர், பழனிச்சாமி, தீபா, மாதவன் எல்லாம் அடிக்கும் கூத்துக்களை வராத சிரிப்பா? அந்த கட்சியினை நினைத்தாலே தூங்கும் பொழுதும் சிரிப்பு வரும், அவர்களின் அட்டகாசத்தை கண்டாலே கவலை மறந்து சிரிக்கலாம் இதில் இவர்கள் தினகரன் படத்தை பார்த்து 30 நிமிடம் சிரிக்கின்றார்களாம், ஆனால் உலகமே இவர்களை பார்த்து 24 மணிநேரமும் சிரிப்பதை மறந்துவிட்டார்கள் போல...      

கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?

Image
மணிரத்னம் மகனிடம் இத்தாலி வெனிஸ் நகரில் திருட்டு. டிவிட்டரில் சுகாசினி உதவி கோரியதால், இத்தாலியில் பலர் உதவினர் : செய்தி "திருடா திருடா" போன்ற மணிரத்தினத்தின் படங்களை மிக நன்றாக ரசித்த எவனோ, அவர் மகனிடமே கைவரிசையினை காட்டிவிட்டான். மணிரத்னம் மகன் காஷ்மீருக்கு போகாமல் இருப்பது இன்னும் நல்லது. இத்தாலி, பிரான்ஸ் எல்லாம் இப்பொழுது கொள்ளைக்கு பெயர் பெற்றுவிட்டன, மிக சாதரணமாக கொள்ளைகள் நடக்கின்றன, பிரான்சில் பெரும் பாதுகாப்பு மிக்க்க ஹோட்டல்களில் பெரும் புள்ளிகளிடமே மிக அசால்டாக கொ ள்ளையடிகின்றனர். இதில் மணிரத்னம் மகன் ஜூஜூபி. இதே வெனிசில் கொஞ்சநாளைக்கு முன்பு குஷ்பூவும் சென்றிருந்தார், அவர் கால் செருப்பை திருடி ஏலம் விட்டிருந்தால் கூட பல மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போயிருக்கும், ஆனால் ஒரு கொள்ளையனும் அவர் பக்கம் வரவில்லை, காரணம் தலைவியின் தங்கமுகத்தை பார்த்தால் கொல்லவரும் பாம்பும் புலியுமே மனம் மாறி பணிந்துவிடும் பொழுது இந்த அற்பமானிட கொள்ளையர்கள் மனம் மாறாதா? சசிகலா மீது துணிந்து குற்றம் சாட்டிய ரூபாவின் கதை சினிமா படமாகிறது, நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு. சசிகலா வேடத்தில் நடிக்...

சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

Image
எல்லையில் சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி எதற்காக சர்ச்சை வந்தது? சீனா சாலை அமைத்ததற்காக, ஆனால் அச்சாலை என்ன ஆனது என இரண்டு பயலுமே சொல்லவில்லை சாலை அமைந்து இந்தியா பின்வாங்கினால் சீனாவின் வெற்றி, சாலையினை தடுத்துவிட்டு சீனாவினை விரட்டியிருந்தால் அது இந்தியாவின் வெற்றி ஆனால் டெல்லியும் சத்தமில்லை, பீஜிங்கும் மகா அமைதி இரு நாடுகளும் சும்மா அல்ல, இரண்டுமே சவுண்ட் பார்ட்டி. சீன அரசின் ஊடகமாகன ஷிங் வா சும்மாவே பீத்திகொண்டிருக்கும், ஒருவேளை இந்தியா பணிந்திருந்தால் இந்நேரம் அது "ஹோ சீ ட்ங் டிங் டெங் பிங்" என நிலா வரைக்கும் மணி அடித்து சொல்லியிருக்கும் இங்கோ மோடி பக்தர்கள் பற்றி சொல்ல தேவையே இல்லை, டிரம்பே அலறும் அளவிற்கு ஆர்பரித்திருப்பார்கள் உண்மையில் என்னதான் நடந்தது? புரியவே இல்லை, என்னதான் ஆனது சாலை? ஒருவேளை நிலத்தில் இல்லாமல் பாலமாக கட்டிவிட்டார்களோ?

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்

Image
எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம் புகழ்பெற்ற காமெடியர்கள் எல்லாம் இரட்டையர்களாகவே இருப்பது ஒன்றும் புதிதல்ல, பல தமிழக சினிமாக்களிலே பார்த்ததுதான் இருவரும் டெல்லி சென்று என்ன சொல்வார்கள்?? "அய்யா, எசமான் வணக்கமுங்க, நீங்க சொல்றபடியெல்லாம் செஞ்சா 4 வருசம் கடத்தலாமுண்ணு நெனச்சோமுங்க, ஆனா அந்த கோஷ்டி விடாது போலிருக்குங்க‌ எங்க கிட்ட எத்தனை பேர் இருக்காங்கண்ணு எங்களுக்கே தெரியலங்க, சபாநாயாகர கூட நம்ப முடியலங்க‌ உங்கள நம்பித்தானுங்க இருக்கோம், ஏதாச்சும் பண்ணுங்க எசமான், தூங்க முடியல. இன்னொரு விஷயமுங்க, நீங்க எவ்வளவு டீசண்டு. எங்களை எல்லாம் ஆட்டிவச்சிட்டு என்னைக்காவது சென்னை பக்கம் வந்திருக்கீங்களா? ஆனா இந்த தமிழக பாஜக அப்படி இல்லீங்க, இந்த எச்.ராசா எல்லாம் வந்து உத்தரவு போடுறாங்க, முடியலீங்க அழுகையா வருதுங்க... எஸ்வீ சேகர், கஸ்தூரி எல்லாம் இனி வரிசையா வருவாங்களோன்னு நினைச்சாலே நெஞ்சு வெடிக்குதுங்க...." அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது: காடுவெட்டி குரு அதனை பாமாகாவினை ஆட்டி படைப்பவர் சொல்வதுதான் காமெடி.

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள் அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம் ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான் இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர் இனி இங்கிருது கொண்டு சிங்களன் அடிக்கின்றான், பிடிக்கின்றான் என சொல்ல முடியாது. தமிழன் தான் தமிழன் படகினை பிடிக்க போகின்றான் அப்பொழுது இங்கிருக்கும் சைமன் கோஷ்டி எப்படி கொதிக்கும்? "ஏ சிங்கள அரசே.. தமிழனுக்கு உயர் பதவி கொடுக்காதே, அவனுக்கு அரசு வேலையே கொடுக்காதே இம்மாதிரி பதவியில் தமிழனை வைத்தால் நாங்கள் எப்படி திட்டுவது? எல்லா அரசு வேலைகளிலும், உயர் பதவிகளிலும் சிங்களனையே வை, தமிழனை விரட்டு. அப்பொழுதுதான் எங்களுக்கு வசதி"      

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது, 30 பேரை பழி வாங்கும் : கேரள ஜோதிடர் ஏன் ஜெயலலிதா ஆவியினையே தேடுகின்றார் இவர், அந்த ராமசந்திரன் ஆவி இப்பொழுது தன் கட்சி அழிவதை கண்டு ஆக்ரோஷபட்டு சுமார் 100 பேரை கொல்ல தேடாதா? அந்த ஆவியினையும் அழைத்தால்தான் என்ன? ஆவி இருப்பது உண்மை என்றால், இப்பொழுது ராமசந்திரனின் ஆவி ஜெயாவின் ஆவியினை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துகொண்டிருக்கும்... "ஏண்டி, கட்சியினைத்தான் பிடுங்கினாய், என் கல்லறையினையினுமா பிடுங்க வந்தாய், ." அட ராமசந்திரன் என்ன? அந்த சந்தண வீரப்பன் ஆவி ஜெயாவினை சும்மா விட்டுவிடுமா?

சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

Image
சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் . சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்திய சந்திரலேகாவிற்கு, ஜெயாவோடு அவர் தங்கி இருந்து உதவ வாய்ப்பளித்த சந்திரலேகாவிற்கு சசிகலா நன்றியோடு இருந்தாரா சுவாமி? அவர் முகத்திலே ஆசிட் அடித்தது என்ன நன்றி கடனா? இதனை போல எத்தனைபேருக்கு நன்றிகடன் காட்டியவர் சசிகலா என்பது உங்களுக்கு தெரியாததா? அந்த சசிகலா கும்பலுக்கு நன்றி இருக்க கூடாது, ஆனால் அவரோடு இருந்தவர்களுக்கு மட்டும் நன்றி இருக்க வேண்டுமா? மிஸ்டர் சுவாமி, சரி பழனிச்சாமிக்கு சசி உதவினார் அவர் நன்றியோடு இருக்கட்டும் என்கின்றீர்கள்? ஆனால் உங்களையும், சந்திரலேகாவினையும் தொலைக்க தேடிய அந்த சசிகலாவிற்கு நீங்கள் இப்பொழுது நன்றியாய் இருக்கும் மர்மம் என்ன? நிச்சயமாக பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவரே அல்ல நீர் என்பதால் கேட்கின்றோம் சசிகலாவிற்கு நீங்கள் திடீர் விசுவாசம் காட்டும் மர்மம் என்ன சுவாமி?

கட்சி அடையாளங்களா? தனியார் சொத்தா?

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. தனியார் சொத்து, யாரும் கைப்பற்ற இயலாது - விவேக் ஜெயராமன் நிதானம் இழப்பு என்பது இதுதான், அதிமுகவின் அடையாளமாக கருதபடுவது ஜெயா டிவியும், அந்த நாளிதழும், அது வெறும் காகித குப்பை என்றாலும் அவர்கள் கட்சிக்கு அது அடையாளம் இப்பொழுது இது இரணடுமே தனியார் சொத்து என பகிரங்கமாக அறிவித்தால் அடிமட்ட தொண்டனிடம் இருக்கும் சசிகலா வெறுப்பு இன்னும் அதிகபடாதா? சசிகலா குடும்பத்தார் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி, கட்சி அடையாளங்களை தனியார் சொத்து என சொல்வது அரசியல் அறிவு ஆகாது.