அதிமுகவினர் நூதன போராட்டம்





தினகரன் படத்தினை பார்த்து சிரிக்கும் போரட்டம் : காட்டுமன்னார் கோவில் அதிமுகவினர் நூதன போராட்டம்


அதாவது இப்படி சிரித்து அவரை அவமானபடுத்துகின்றார்களாம்


ராமசந்திரனின் படங்களை பார்த்தால், அவரின் நடனத்தையும், உதடு சுழிப்பினையும் பார்த்தால் வராத சிரிப்பா?





ஜெயலலிதா நடிப்பு என கொல்வாரே, அதனை கண்டால் வராத சிரிப்பா?

ராமசந்திரனின் அண்ணாயிச விளக்கத்தை பார்த்து வராத சிரிப்பா?

ஜெயாவும் சசிகலாவும் ஆண்ட ஆட்சிபார்த்து வராத சிரிப்பா? அல்லது இப்பொழுது பன்னீர், பழனிச்சாமி, தீபா, மாதவன் எல்லாம் அடிக்கும் கூத்துக்களை வராத சிரிப்பா?

அந்த கட்சியினை நினைத்தாலே தூங்கும் பொழுதும் சிரிப்பு வரும், அவர்களின் அட்டகாசத்தை கண்டாலே கவலை மறந்து சிரிக்கலாம்

இதில் இவர்கள் தினகரன் படத்தை பார்த்து 30 நிமிடம் சிரிக்கின்றார்களாம், ஆனால் உலகமே இவர்களை பார்த்து 24 மணிநேரமும் சிரிப்பதை மறந்துவிட்டார்கள் போல...




 

 



 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10