அதிமுக அழிந்துவிட கூடாதாம் : திமுக
இப்பொழுதெல்லாம் சில திமுகவினருக்கு அதிமுக மீது பாசம் பொத்துகொண்டு வருகின்றது, அதிமுக அழிந்துவிட கூடாதாம். அது அழிந்தால் பாஜக வளருமாம்
திமுக தீயாய் தன் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் பாஜக எப்படி வளரும்?
ஏன் பயம்? பகுத்தறிவினை பரப்ப உழைக்க வேண்டும் எனும் பயமா?
இவ்வளவுதானா உங்கள் நம்பிக்கை?
பாஜகவினை எதிர்க்க முடியாத அளவிற்கா திமுக பலம் கெட்டு போயிற்று? அப்படியா அஞ்சுகின்றீர்கள்? அப்படியானால் இது வீழ்ச்சி அல்லவா?
கலைஞர் அதிமுக அழியவேண்டும் என விருப்படவே இல்லையாம், அவர் ரகசியமாக ஆதரித்தாராம்.
பின் என்ன மண்ணாங்கட்டிக்கு அவர்களை எதிர்த்து அரசியல் செய்தார்? தமிழக மக்களை கலைஞர் ஏமாற்றினார் என சொல்லவருகின்றீர்களா?
ரகசிய ஆதரவென்றால் ஏன் மல்லுகட்டி அந்த சொத்துகுவிப்பு வழக்கினை திமுக நடத்தியது என்றால் பதில் இல்லை.
விட்டால் சசிகலா சிறையில் இருப்பதால் தன் தவறை எண்ணி கலைஞர் அழுது புலம்பி மவுனவிரதம் இருக்கின்றார் என சொல்லிவிடுவார்கள் போல..
அதிமுக அணிகள் இணையாவிட்டால் பல ரகசியங்களை வெளியிடுவேன் : கோவை எம்பி நாகராஜன்
அய்யா, வெளியிடுவதே வெளியிடுகின்றீர்கள். அந்த எம்ஜிஆர் காலத்து ரகசியங்களயும் வெளியிடுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்.
Comments
Post a Comment