Posts

Showing posts from September, 2017

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்

Image
இது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்.  திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது. இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம் அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது. கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை. இதில் கமலஹாசன் என்ன? சாருஹாசன் கூட வரலாம். வந்து எப்படி மக்கள் வரவேற்பினை பெருகின்றார்கள் என்பதுதான் விஷயம். ஆனால் கமல் கட்சி நடத்துவதும் சாமான்ய விஷயம் அல்ல, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக கட்சி வளர்க்க முனைந்த வைகோ, மூப்பனார், விஜயகாந்த் எல்லாம் பட்டபாடு கொஞ்சம் அல்ல. அதுவும் மூப்பனாருக்கு பின்னபட்ட சதிவலைகள் கொஞ்சமல்ல, இன்றுவரை ரஜினி தயங்கி நிற்பதற்கு மூப்பானாருக்கு ஏற்பட்ட அந்த நிலையே காரணம். அதனை கண்ணால் கண்டவர் அவர். எனினும் ஒரு விஷயம் கவனிக்கதக்கது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வர டெல்லி உதவி இ...

செப்டம்பர் 22, 2016

Image
காமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன். இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும் ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை அவர்கள் சமையல்காரரும் சொல்லவில்லை, அருகிலே இருந்த சசிகலாவு முழு பேட்டி கொடுக்கவுமில்லை இப்படி இன்னும் வெளிவராத ஆரம்ப தகவல்களே வராத நிலையில் வருடம் 1 ஆகின்றதாம். கோடான கோடி செல்வங்களையும், அரண்மனைகளையும் குவித்த ஜெயலலிதா, தனக்கு உண்மையாக அழ ஒருவரை கூட சம்பாதிக்காமல் போனதுதான் சோகம்

சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே

Image
அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும். போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது. உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது. சென்பகர...

பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்...

Image
இந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன். அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன் எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது. ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக பார்கின்றார்கள். இது சீனர்களுக்கு பேய் மாதமாம், அவர்கள் வேறு பயந்துவிட்டார்கள். மனிதர் இப்படியா பெரும் சிக்கலை ஒருவனுக்கு உருவாக்குவார்?, சத்தியமாக ஜெயலலிதா ஆன்மா இவரை சும்மா விட கூடாது அப்படி என்ன சொல்லி விட்டார்?, அலுவலகத்தில் அல்லது முக்கியமான கூட்டத்தில் , துக்க வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம் அவர் சொன்னது இதுதான் ... ... .. "என்னை போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது"  

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4

Image
சிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும் என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது. அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும் முடியவில்லை, மொத்த ஐரோப்பா சேர்ந்தாலும் நடக்கவில்லை அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள், அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன, அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு அனுப்பினார்கள், ஏதோ கிளர்க் வேலை போல பார்த்துகொண்டிருந்தான் அது ஒப்புக்கு சப்பான வேலை, அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான் உண்மையில் அவன் மிக...

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன் ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா? அது வரலாறென்றால், இந்த‌ வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு. மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?

இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்? ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள், என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம். ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்? மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன? அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள் மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை. மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது. பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம். அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவத...

ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான் இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது. அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான். அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன். வைகுண்டராஜனை விஜயகாந்த் குற்றம்சாட்டிய பொழுதெல்லாம், அவர் வீட்டு புல்டாக் நாயாக கத்தியது இந்த சீமானே. விஜயகாந்தினை எப்படி எல்லாம் திட்டினார் என்பதற்கு அவரின் முன்னாள் பேச்சுகளே சாட்சி இப்பொழுது அவர் விஜயகாந்தினை மிக மதிக்கின்றாராம், அவரை பாராட்டுகின்றாராம். அதாவது ஜெயலலிதா இல்லை, நடராஜன் கும்பல் அரண்டு போயிற்று, தாதுமணல் சிக்கலில் வைகுண்டராஜனுக்கும் தலைவலி. முன்பு போல அங்கிருந்து கொட்டபடவில்லை, இனி அவர்களுக்கும் எதிர்காலமில்லை. அன்னார் அதனால் நைசாக விஜயகாந்த் பக்கம் நூல்விட்டு பார்க்கின்றாராம்.. ரஜினியினை எப்பொழ...

காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள் அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா? சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை மீட்டு வந்தால் என்ன? திமுக 18 ஆண்டுகள்இருந்தே முடியவில்லை, எங்களுக்கு 25 ஆண்டாவது அவகாசம் வேண்டும் , அப்பொழுதுதான் காவேரி வரும் என மட்டும் சொல்லிவிடாதீர்கள், பயங்கர கோபம் வரும் ஆமாம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள். கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள். அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள். ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள். ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து வருகின்றார்கள்? அது அதிமுகவோ, திமுகவோ இரண்டும் அப்படித்தான். சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இதோ இந்த இந்த சுயநல வழக்கிற்கு அள்ளி செலவழிப்பவர்கள், நீட் காவேரி உட்பட தமிழக‌ பொதுநல வழக்கில் ஒரு பைசா செலவழிப்பதில்லை. ஏன் நீட் தேர்வில் அனிதாவிற்காக இந்த கபில் சிபலை திமுக வைத்து வாதாட கூடாதா? பால் நரிமனை அமர்த்தியிருக்க முடியாதா? அனிதா செத்தவுடன் அள்ளி கொடுப்பவர்கள், அவள் தரப்பு நியாயத்தை வைக்க நல்ல வழக்கறிஞரை அமர்த்தினார்களா என்றால் இல்லை, ஏன் என்றால் அப்படித்தான் ஆனால் அனிதா செத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்...

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர் அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி. அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் நடக்க தொடங்கிவிட்டது. இதோ தொடங்கிவிட்டார்கள், கொஞ்ச நாளில் இலங்கை பாராளுமன்றத்திலும் அவர் படம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை. ஆக சிங்களன் இலங்கைக்கு மகா விசுவாசமானவனாக பிரபாகரனை தூக்க ஆரம்பித்துவிட்டான். இந்திய தமிழர்களுகுத்தான் சொரணையே இல்லை இனியாவது தமிழக தமிழர்களுக்கு சொரணை வரட்டும்.

முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை

Image
நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம் இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? "தெய்வீக கொலு" பொம்மை இதுதான். இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது. முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை, சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான். இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.  

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது

Image
நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும். ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு. அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் தொடர்ந்து பிரார்த்தித்து பத்தாம் நாள் நிறைவு செய்யவேண்டும் என்பது சட்டம். அதனை ஆங்கிலத்திலும், லத்தீனிலும் "நவனா" என்றே அழைப்பார்கள், லத்தீனிலும் ஒன்பது என்பதற்கு நவம் என்றே பெயர். தமிழில் நவநாள். அதனடிப்படையில் அனைத்து கத்தோலிக்க திருவிழாக்களை பாருங்கள் 9 நாள் ஜெபம், பத்தாம் நாள் கிடா வெட்டி கொண்டாட்டம் + தேர் பவனி என நிறைவு செய்வது, என இதே நவராத்திரியை "நவநாள்" என கொண்டாடுவார்கள். (11ம் நாள் திருவிழா செலவு கணக்கு பார்பார்கள்) பிரிவினை கிறிஸ்தவர்கள் வேறுமாதிரி, ஆளாளுக்கு ஒரு போதனை, ஆள...

ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?

Image
உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன‌ அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன‌ அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம். அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, பர்மாவின் கடற்கரை பகுதி அது என்பதால் வங்கதேசத்துக்க்கும் அவர்களுக்கும் தொடர்பு அன்றே இருந்திருக்கின்றது. பின்பு பிரிட்டன் வந்தபொழுதும் அவர்களை பர்மா குடிமக்களாக நடத்தியிருக்கின்றது. வங்கம், பர்மா, ரொகிங்யா எல்லாம் பிரிட்டனிடம் இருந்தவரை அவர்களுக்கு சிக்கல் இல்லை பின்பு சிக்கல் பர்மா சுதந்திரபோரில் தொடங்கியிருக்கின்றது, பர்மாவின் சுதந்திர தந்தை ஆங்சான். அவர் ஒரு கம்யூனிஸ்ட் போராளி. பர்மா விடுதலையின் பொழுதே ரொகிங்கியா மக்கள் தனிநாடு கோரினர். பொதுவாக தான் ஆண்ட நாடுகளில் ஏதாவது கொளுத்திபோடுவது...

"ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே..."

Image
இயேசுநாதர் காலத்தில் இஸ்ரேல் நாடு ரோமர் ஆளுகையில் இருந்தது, அதனை எதிர்த்து பல கலகம் நடந்தது அதாவது கடவுளின் நேரடி மக்களான யூதர்களுக்கு கடவுளே அரசன், அவர் ஒருவருக்குத்தான் அவர்கள் வரி செலுத்தி வணங்கவேண்டும், அதனால் பலர் ரோமரை ஏற்க தயங்கினார்கள், பல கலவரம் நடந்தது. அப்பொழுது இயேசு போதித்துகொண்டிருக்க அவரிடம் கேட்டார்கள், "நாம் ரோமருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" அது அவரை சிக்கவைக்கும் கேள்வி, வரி செலுத்துங்கள் என்றால் அவர் கடவுளை அவமதித்ததாகும், இயேசு போலிச்சாமி ஆகிவிடுவார் வரி செலுத்தாதீர்கள் என்றால் அப்படியே கட்டி தூக்கி ரோமரிடம் உங்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துகின்றான் கொல்லுங்கள் என கொடுத்துவிடலாம் இயேசு அமைதியாக சொன்னார், "கடவுளையதை கடவுளுக்கும், அரசனுடையதை அரசனுக்கும் செலுத்துங்கள்" அதாவது அரசை பற்றி ஏன் கவலைபடுகின்றீர்கள்? அவன் ஜஸ்ட் காவல்காரன், அவனுக்குள்ளதை கொடுத்துவிடுங்கள், நாம் பரலோக கடவுளின் மக்கள் என்பதால் அதற்கேற்ப வாழுங்கள் என்பது பொருள் எந்த அரசன் ஆண்டால் என்ன? அரசியல் நமக்கு தேவையில்லா விஷயம், நம்முடைய பணியும் வாழ்வும் வேறு என அ...

அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி அமெரிக்காவினை விடுங்கள், ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பு ஆண்டது யார்? மம்மி வழிகாட்டலில் மன்மோகன் சிங் அல்லவா 10 ஆண்டுகள் ஆண்டார் அப்படியானால் மன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது என ஒப்புகொண்டுவிட்டீர்கள் என்றாகிவிடாதா? இப்படியா சிக்குவீர்கள் ராகுல்காந்தி... இதற்குத்தான் "அவர்" உடல்நலத்தோடு இருக்கும்பொழுதே கோபாலபுரத்தில் கோச்சிங் கிளாஸ் செல்லவேண்டும் என்பது.

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

Image
அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26 திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும். வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், சொல்வது சிக்கல் இல்லை , சொன்ன மறுநொடி ரஷ்யா அமெரிக்காவினை சின்னாபின்ன படுத்தும் இவருக்கோ என்ன செய்வதென தெரியவில்லை, காரணம் அது மிரட்டல்கள் இல்லா இயல்பான காலம். போர் எல்லாம் வர வாய்ப்போ பிரச்சினையோ இல்லை, இப்பொழுது எப்படி? ஆனால் சொல்லாமல் இருந்து, வருவது ஏவுகனைகளாக இருந்தால் ரஷ்யா அழியும், பின் இவர் அந்த பொறுப்பில் இருந்து என்ன பயன்? இப்படியாக இரு விஷயங்களை மாறி மாறி யோசித்தாலும் அவர் உள்மனம் சொன்னபடி நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டார், 20 நிமிடங்களில் முடிவு தெரியும் எப்படி இருந்திருக்கும் அவருக்கு? ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தார். த...

எடப்பாடி புனித நீராடல்... சன்னிலியோன் மழை நீராடல்

"எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது" : முதல்வருக்கு எதிராகச் சீறுகின்றார் தினகரன் நாம் சற்றுமுன் சொன்னதை தினகரனும் சொல்லியிருக்கின்றார், அதாவது முதல்வர் பழனிச்சாமி புனித நீராடியதை அப்படி சொல்லியிருக்கின்றார். ஆனால் முன்பு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயா,சசிகலா குளிக்கபோய் ஏராளமானோர் செத்து, பலர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்க அவர்களை பார்க்க கூட செய்யாமல் திரும்ப வந்த அந்த பாவம் எந்த நதியில் மூழ்கினால் தீரும் என்பதை தினகரன் சொல்லவில்லை. பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஆகியோர் புனித நீராடினர் பன்னீர் செல்வம் ஏன் செல்லவில்லை என்பது தெரியாது, ஒருவேளை எந்த நீரில் ஆடினாலும் தன் பாவம் தீராது என அவருக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் பழனிச்சாமிக்கும், சபாநாயகருக்கும் தெரியவில்லை. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்சியில் சன்னிலியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழையில் ஆடினார். இந்த செய்தியினை படிக்கும் பொழுதே வயிறு எரிகின்றது, கண்கள் சிவக்கின்றன‌ என்ன கொடுமை இது? தமிழன் எப்படி எல்லாம் ஏமாற்றபட்டு கொண்டிருக்கின்றான். தமிழிலும் பிக்பாஸ் நடத்துகின்றனரே கிராதகர்கள்...

"அம்மா என்போம்... மம்மி என்பதைத் தவிர்ப்போம்" - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு

"அம்மா என்போம்... மம்மி என்பதைத் தவிர்ப்போம்" - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அப்பொழுதும் அவருக்கு அன்னை, தாய் போன்ற வார்த்தைகள் வரவில்லை, அம்மா தான் வந்திருக்கின்றது எல்லாம் அப்பல்லோவில் தொடங்கி ஜெயாவின் இறுதிசடங்கு அதை தொடர்ந்த நிகழ்வுகளில் அதிமுகவினரோடு நெருக்கமாக இருந்ததால் வந்த பழக்கம்.  

ஈழ விவகாரம் பேச போகின்றேன் : இயக்குநர் கவுதமன்

Image
ஈழ விவகாரம் பேச போகின்றேன் என ஐ.நா சென்ற இயக்குநர் கவுதமன் என்ன பேசியிருக்கின்றார்? தமிழ்நாடு நிம்மதியாக இல்லை, பிரிட்டன் எங்களை அடிமைபடுத்தி இந்தியோடு இணைத்தது. இங்கு பெரும் போராட்டம் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீருக்கு நிகராக நடக்கின்றதாம், உலகம் கண்டுகொள்ளவில்லையாம் தமிழில் உச்சநீதிமன்றத்தில் வாதாட முடியவில்லையாம் (மலையாளம், கன்னடம் இன்னும் மற்ற மாநிலம் எல்லாம் எப்படி என அன்னார் சொல்லவில்லை), இப்படி தமிழரை கொடுமைபடுத்துகின்றார்களாம், தமிழக மாணவர்களுக்கு கல்வி மறுக்கபட்டதாம், அப்துல் கலாம் பேசிய அதே ஐ.நா சபையில் அன்னார் சொல்வதுதான் பரிதாபம் தமிழகத்தில் மற்ற மாநிலத்தோர் படிக்கின்றார்களாம், தமிழன் எங்கெல்லாம் படிக்கின்றான் என சொல்லவில்லை காவேரியில் கொடுமையாம், ஆனால் பெங்களூரில் வாழும் தமிழர் பற்றி ஒரு வார்த்தையில்லை காவேரியில் நீர் விடவில்லையாம், ஆனால் பவானி, நொய்யல், அமராவதியில் கட்டபட்டிருக்கும் அணை பற்றி மூச் இல்லை. செம்மரம் கடத்தலில் தமிழரை மட்டும் பிடிக்கின்றார்களாம், ஆனால் சமீபத்தில் செத்த கல்கத்தா நடிகை பற்றி சத்தமே இல்லை தமிழக விவசாயி தற்கொலை செய்கின்றானாம், ஆனால் பழனிச்சாமி அரசு...

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857 அதுவரை கிழகிந்திய கம்பெனியின் நாடாக இருந்த இந்தியா, அன்று தொடங்கிய கலவரங்களின் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டிற்கு சென்று பிரிட்டிஷ் இந்தியா ஆனது. அதாவது எத்தனை நாள்தான் டாஸ்மாக் எனும் தங்க சுரங்கத்தை தனியாரிடம் விட்டுவைப்பது, நாமே நடத்தினால் என்ன என அரசு கைபற்றியது அல்லவா? அப்படி இந்தியாவினையும் பிரிட்டன் அரசு எடுத்தது. அது எடுத்தபின்பே பல சட்டங்களும்,முறையான அரசும் இந்தியாவிற்கு வந்தன, அதன் அடிப்படையிலேதான் காந்தி போராட முடிந்தது கிழக்கிந்திய கம்பெனி தொடர்ந்திருக்குமாயின் காந்தியினை என்றோ போட்டு தள்ளியிருப்பர், அவர்களின் காட்டாட்சி அப்படி. 1857ம் ஆண்டு மீரட்டில் நடந்ததுதான் முதல் விடுதலைப்போர் என குறித்துவிட்டார்கள், அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை, ஆனால் முதல் கிளர்ச்சி அது அல்ல‌ 1806ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்ததுதான் மிகபெரும் கிளர்ச்சி, ஆனால் அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் கண்களில் விரலை விட்டு நெப்போலியன் ஆட்டிகொண்டிருந்தான் என்பதால் அவர்கள் கவனம் முழுக்க அவன் மீதே இருந்தது. 1857ல் அப்படி சிக்கல...

காவேரியில் நீர் வராதது பிரச்சினையா?

"விவசாயிக்குத் தண்ணிப் பிரச்னை இல்ல... தன்மானம்தான் பிரச்னை” - நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த ஆள் என்ன வகையறா? அவனவன் 1000 ஆடிக்கு போர்வெல் அமைத்து ஒரு சொட்டு தண்ணீருக்காக தவித்துகொண்டிருக்கின்றான் காவேரியில் நீர் வராதது பிரச்சினையா? இல்லை விவசாயிக்கு மான பிரச்சினையா? கொஞ்சமேனும் நாட்டு நிலவரம் தெரிந்தால் மனிதர் இப்படி பேசுவாரா? இவ்வளவிற்கும் விவசாயிகள் கூட்டத்தில் பேசினாராம், எப்படி அடிக்காமல் விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை, ஒருவேளை விவசாயி வேடம் போட்டவர்கள் கூட்டம் நடத்தினார்களோ என்னமோ? ஆக கன்னடத்துகார விவசாயிக்கு தண்ணி பிரச்சினை இல்லை என்பதை தமிழகத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் பிரகாஷ் ராஜ்.

AICUF : அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா?

Image
இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்ற முறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும் நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன். அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா? இல்லை All India Catholic University Federation என்பதன் சுருக்கம் (AICUF) என வரும். கவனியுங்கள் அது அகில இந்திய கத்தோலிக்க மாணவர்களின் கூட்டமைப்பு, அதில் கத்தோலிக்க மரபினை, அதன் சிறந்த கருத்துக்களை பகிர்ந்து அகில இந்திய அளவில் கத்தோலிக்க மாணவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாக வளர வழிசெய்தால் சிக்கலே இல்லை. ஆனால் நடப்பது என்ன? எல்லா மத மாணவர்களும் அதில் பங்கெடுக்கலாம், மருந்துக்கும் கிறிஸ்துவத்தை பற்றி சொல்லமாட்டார்கள், மாறாக போதிப்பது எல்லாம் இந்தியாவில் அரசு அப்படி செய்கின்றது, இப...

செப்டம்பர் 29தான் "குஷ்பூ டே" அல்லது "பிரபஞ்ச பேரழகு தினம்".

Image
தலைவி தன் பிறந்தநாள் செப்டம்பர் 29 என அறிவித்துவிட்டார், இணையத்தில் மோடியின் சாதனைகளை போல அவரின் பிறந்த நாள் தவறாக இன்று என பதிவிடபட்டிருக்கின்றது. இன்று பிறந்தநாளாக இருந்திருந்தால் சங்கம் சும்மா இருக்குமா? நள்ளிரவு 12 மணிக்கே கொண்டாட்டம் தொடங்கி பெரும் ஆரவாரமாக கொண்டாடி கொண்டிருக்காதா? ஆக ரசிக கண்மணிகள் தங்கள் பிரார்த்தனைகளை, வாழ்த்துக்களை செப்டம்பர் 29 அன்று தெரிவிக்குமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கின்றோம் செப்டம்பர் 29தான் "குஷ்பூ டே" அல்லது "பிரபஞ்ச பேரழகு தினம்". ஆச்சரியமாக "வானதூதர்களின் தினம்" செப்டம்பர் 29 என கிறிஸ்தவ கத்தோலிக்கமும் அறிவித்திருக்கின்றது. வான தூதர்களின் தினத்தில்தான், இந்த தேவதையும் பூமிக்கு வந்திருக்கின்றது. இன்று அந்த மாபெரும் கொண்டாட்டத்திற்கான தொடக்க விழா.. இன்னும் 10 நாளில் உலகம் கொண்டாடபோகும் விழாவினை எப்படி சிறப்பிக்கலாம் எனும் ஆலோசனையில் சங்கம் இறங்கியிருக்கின்றது. இந்தியாவினை விடுங்கள், அந்த டொனால்டு டிரம்பே பிரமிக்கும் அளவிற்கும், வடகொரிய அதிபர் தன் ஆயுத சோதனைகளை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்கும் அளவிற்கும் மாபெரும் க...