சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

big_461556_1498751421.jpg


எல்லையில் சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி


எதற்காக சர்ச்சை வந்தது? சீனா சாலை அமைத்ததற்காக, ஆனால் அச்சாலை என்ன ஆனது என இரண்டு பயலுமே சொல்லவில்லை


சாலை அமைந்து இந்தியா பின்வாங்கினால் சீனாவின் வெற்றி, சாலையினை தடுத்துவிட்டு சீனாவினை விரட்டியிருந்தால் அது இந்தியாவின் வெற்றி




ஆனால் டெல்லியும் சத்தமில்லை, பீஜிங்கும் மகா அமைதி


இரு நாடுகளும் சும்மா அல்ல, இரண்டுமே சவுண்ட் பார்ட்டி. சீன அரசின் ஊடகமாகன ஷிங் வா சும்மாவே பீத்திகொண்டிருக்கும், ஒருவேளை இந்தியா பணிந்திருந்தால் இந்நேரம் அது "ஹோ சீ ட்ங் டிங் டெங் பிங்" என நிலா வரைக்கும் மணி அடித்து சொல்லியிருக்கும்


இங்கோ மோடி பக்தர்கள் பற்றி சொல்ல தேவையே இல்லை, டிரம்பே அலறும் அளவிற்கு ஆர்பரித்திருப்பார்கள்


உண்மையில் என்னதான் நடந்தது? புரியவே இல்லை, என்னதான் ஆனது சாலை?


ஒருவேளை நிலத்தில் இல்லாமல் பாலமாக கட்டிவிட்டார்களோ?



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10