உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

சசிகலா மீதான வழக்குகளை காட்டி, தினகரன் மீதான வழக்குகளில் மிரட்டி, பன்னீரையும் பழனிச்சாமியினையும் பார்வையிலே கதறவைத்து பாஜக மிரட்டலாம் அதன் மூலம் அதிமுகவினை விரல் நுனியில் ஆட்டலாம்


ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கினை, தயாநிதி மாறன் வழக்கினனை காட்டி கலைஞர் குடும்பத்தையும் மிரட்டி திமுகவினை ஆட்ட நினைத்தால் அக்குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுகவினை காக்க உண்மையான திமுகவினர் முன்வருவார்கள் எனறொரு குரல் எங்காவது கேட்கின்றதா என்றால் இல்லை


உண்மையான திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்கும், ஆனால் தளபதி ஜால்ரா, கனிமொழி ஜால்ரா திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்காது.


"ஏ ஆரிய பாஜகவே அக்குடும்பத்தை மட்டும் வேண்டுமானால் மிரட்டலாம், ஆனால் அவர்களின்றியும் திமுக இயங்கும். இது பகுத்தறிவு இயக்கம், பெரியார் ஏற்றிய நெருப்பு


அண்ணா இன்றி அவர் குடும்பம் இன்றி இயங்கிய இந்த மாபெரும் நெருப்பு இயக்கம் கலைஞர் இன்றியும் அவர் குடும்பம் இன்றியும் இயங்கும், முடிந்தால் தொட்டுபார்" என்றொரு குரல் எங்காவது இருந்து வருமா என எதிர்பார்த்தால் வரவே இல்லை


அதாவது உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை


அதிமுகவில் இன்று தெரியும் பலகீனம், திமுகவில் கொஞ்சநாள் கழித்து தெரியும் அவ்வளவுதான் விஷயம்

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10