நீட் தேர்வை எதிர்த்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றது தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக பெரும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது தமிழ்நாடு, ஆனால் டெல்லி கொஞ்சமும் இறங்கி வந்ததாக தெரியவில்லை.


மாறாக தன் தமிழக அல்லக்கைகளை கொம்பு சீவிவிட்டு நிலமையினை சீரியஸாக்குகின்றது, மத்திய அரசு தன் பிடியில் இருந்து இறங்கி வருவதற்கான அறிகுறிகள் கொஞ்சமும் தென்படவில்லை.


இப்பொழுது ஒரு விஷயம் ஆழ நோக்கினால் புரிகின்றது.




அதாவது குலகல்வி திட்டம் என தமிழகம் பொங்கியபொழுது ராஜாஜி பதவி விலக டெல்லி அழுத்தம் கொடுத்தது, அதன் பின் இந்தி எதிர்ப்பில் தமிழக குரலுக்கு இறங்கி வந்த நேரு இந்தி திணிப்பதை நிறுத்தினார்


கன்னியாகுமரி போராட்டதின்பொழுது டெல்லியின் கனிவு தமிழக பக்கமே இருந்தது, அது பரம்பிகுளம் ஆழியாறு அணைகட்டு விவகாரத்திலும் தெரிந்தது.


ஈழபிரச்சினையில் தமிழகம் பொங்கியதும், தமிழக மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்துதான் இந்திராவின் அரசு ஈழத்தில் தலையிட்டது, ராஜிவும் அதனை தொடர்ந்தார்


பின் தமிழக கோரிக்கையினை ஏற்றே அமைதிபடையும் மீட்கபட்டது.


(பின் பிரபாகரனின் பல கொடூர தவறால் டெல்லி ஒதுங்கியது வேறுவிஷயம்)


ஆக வரலாறு முழுக்க தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் செவிமடுத்துகொண்டேதான் இருந்திருக்கின்றது என்பது இப்பொழுது புரிகின்றது.


நீட் விவகாரத்தில் கொஞ்சமும் இறங்காமல் அடம்பிடிக்கும் இந்த பாஜக அரசின் நிலையில் அது நன்றாக தெரிகின்றது.


இதனை விளக்கி சொல்லவேண்டிய காங்கிரஸ் தூங்குகின்றது


காங்கிரஸ் தமிழருக்கு துரோகம் மட்டுமே செய்யும் என புரட்டும் தமிழ்தேசிய, திராவிட இம்சைகளும் இதனை திட்டமிட்டு மறைக்கின்றன‌


மொத்தத்தில் தமிழருக்கு மிக விரோதமான கட்சி பாஜக எனும் இமேஜ் உருவாகும் பொழுது, தமிழருக்கு அனுதாபமானது காங்கிரஸ் கட்சி எனும் இமேஜினை உருவாக்க காங்கிரஸுக்கு தெரியவில்லை


எப்படி தெரியும்?


இந்த திருநாவுக்கரசு எனும் முன்னாள் பாஜகவின் ஸ்லீபர் செல்லும், ஜெயாவின் அடிமையுமாக இருந்த அவரை தலைவராக வைத்திருக்கும்பொழுது எப்படி அவர்கள் இதனை எல்லாம் பேசுவார்கள்?


ஆக தமிழக குரலுக்கு முன்பு காங்கிரஸ் எப்படி எல்லாம் செவிசாய்த்திருக்கின்றது என மக்கள் உணரும் திருப்பணியினை செவ்வனே செய்கின்றது அடம் பிடிக்கும் பாஜக அரசு.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10