ஸ்டாலின் சொதப்பியது நன்றாக தெரிகின்றது





திமுக செயல் தலைவர் மிச்சர் தின்பதோ அல்லது அல்வா உண்பதோ அவர் விருப்பம், எதுவும் உண்ணட்டும்


ஆனால் தமிழகத்தில் எழும் கேள்வி ஒன்றுதான்.


அனிதாவிற்கு நீட் விஷயத்தில் ஆதரவுகரம் அதிமுக நீட்டவில்லை, அது நீட்டவும் நீட்டாது.





ஆனால் திமுக நீட்டியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்ற அளவிற்கு சென்றிருக்கின்றார்கள்

முன்பு கனிமொழிக்கும் ஆண்டிமுத்து ராசாவுக்கும் ராம்ஜெத்மலானியினை வாதாட வைத்தது திமுக, அதில்தான் ஜாமீன் பெற்றார் கனிமொழி.

தயாநிதிமாறனுக்காக வழக்காடிய வக்கீலின் சம்பளம் என்ன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

இப்பொழுது நீட்டிற்கு அமுதாவிற்காக இவர்கள் எந்த வழக்கறிஞரை அமர்த்தினார்கள் என்பது தெரியாது.

ஜெயலலிதா வழக்கினை 18 ஆண்டுகாலம் நடத்திய அன்பழகனை அனிதா தொடுத்ததாக சொன்ன வழக்கில் காணவில்லை

முரசொலிமாறன் போலிஸ் தாக்கியதில்தான் சுகவீனமுற்று உயிரிழந்தார் எனும் ஒற்றை சான்றிதழுக்காக அமெரிக்க மருத்துவமனை வரை மல்லுகட்டியதும் இதே திமுக, ஆனால் அது கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அப்படி எல்லாம் மல்லுகட்டி நின்ற திமுக, இப்பொழுது நீட்டிற்காக ஏன் விடாபிடியாக நிற்கவில்லை என்பதுதான் கேள்வி?

பெரும் வழக்கறிஞர்களை கொண்டு தன் சொந்த கட்சிக்காரர்களுக்கு வழக்கு நடத்திய திமுக, ஜெயலலிதாவினை ஒழிக்க வழக்கு நடத்திய திமுக, இந்த நீட்டிற்காக பெரும் வழக்கறிஞ‌ர்களை அமர்த்தாது ஏன்?

அது நீட்டிற்கான நீதியோ இல்லை அதனை வைத்து அரசியலோ சுத்தமாக செய்ய தெரியவில்லை என்றுதான் மக்கள் குரல் சொல்கின்றது

அதாவது ஸ்டாலின் சொதப்பியது நன்றாக தெரிகின்றது.

குலகல்வி திட்டம், கல்லகுடி போராட்டம், இந்தி எதிர்ப்பு, மிசா எதிர்ப்பு என எப்படி இருந்த திமுக, நீட் தேர்விற்கு இப்படி சொதப்பிவிட்டதே எனும் ஆதங்கம் தான் ஸ்டாலினுக்கு மிச்சர் பொட்டலம் அனுப்புகின்றதே தவிர வேறோன்றுமல்ல‌

இப்படியே சென்றால் பாஷா படத்து பாடலைத்தான் இனி திமுக மேடைகள் முன்னால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தார் படிப்பர்

"திமுக ஜாதகத்த மாத்திவச்ச பாவி யாரடா
அந்த எரிமலையில் ஈரதுணி போட்டதாருடா.."




 

 



 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10