"துன்" எனும் மிகபெரும் விருதினை பெறும் தமிழரான சாமிவேலு




Image may contain: 1 person, sitting, suit and indoorமலேசிய அரசியல் பிரமுகரும், இந்தியாவிற்கு சிறப்பு தூதருமான ச.சாமிவேலுவுக்கு துன் விருது வழங்கபடுகின்றது.


நமது நாட்டில் பாரத ரத்னா விருது போல மலேசிய அதி உச்ச விருது "துன்".


மலேசிய காமராஜர் என மக்களால் அழைக்கபட்ட சம்பந்தன் போன்ற தமிழர்கள் அடைந்த அந்த உச்ச விருதினை, சாமிவேலும் பெறுகின்றார்.





யாருக்கு என்ன மரியாதை செய்யவேண்டுமோ அதனை மலேசிய அரசு மிக கவனமாக செய்கின்றது. அதில் இனபேதம் எல்லாம் இல்லவே இல்லை.

"கபாலி" எனும் படத்தில் ஏதோ தமிழர்களை எல்லாம் அடிமட்டத்தில் வைத்திருக்கின்றார்கள், சீனனும் மலாய்காரனும் போட்டு அடிக்கின்றான் என அபத்தமாக உளறிகொட்டிய பா.ரஞ்சித் என்பவர் இப்பொழுது முகத்தை எங்கு வைப்பார் என்று தெரியாது.

இந்த நூற்றாண்டின் மிகபெரிய பொய்யர் யாரென்றால் அந்த கபாலி இயக்குநர் ரஞ்சித் என்பவர்தான் சந்தேகமேயில்லை, அங்கிள் சைமன் எல்லாம் அடுத்த இடம்தான்.

உலகெல்லாம் இருந்து தமிழர்கள் சாமிவேலுவிற்கு வாழ்த்து தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள். சீமான் கோஷ்டிகள் இதில் எல்லாம் கப்சிப்

அவர்களுக்கு எங்காவது தமிழன் செத்தால்தான் நல்லது, அப்பொழுதுதான் களத்த்திற்கு வருவார்கள், தமிழன் வாழ்த்து பெறும் இடத்தில் எல்லாம் அவர்களை காணமுடியாது.

வை.கோவிற்கு இப்பொழுது மனம் எப்படி கொதிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, நேரில் கூட வாழ்த்து தெரிவிக்க முடியாத அளவிற்கு அவர் நிலை சென்றாயிற்று.

"துன்" எனும் மிகபெரும் விருதினை பெறும் தமிழரான சாமிவேலு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.













 


 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10