மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம்

மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம் பற்றி எரிகின்றது, பெரும் கொடூரமான தாக்குதல்களும் விரட்டல்களும் அந்த மக்கள் மேல் நிகழ்த்தபடுகின்றன‌


மகா கொடூரமாக அவர்கள் குடியுரிமையற்றவர்கள் என சொல்லி திமிராக நிற்கின்றது மியன்மார் அரசு.


இந்த உலகில் இதனை கண்டித்து ஒரு குரல் கேட்கின்றதா இல்லை, கேட்கவும் கேட்காது. இதுதான் உலக யதார்த்தம்




நேற்று மியன்மார் சென்ற மோடி கூட ஒரு மூச்சும் அது பற்றிவிடவில்லை, மிக சமத்தாக சுற்றிவிட்டு வந்துவிட்டார்.


உள்நாட்டிலே இஸ்லாமியரின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத மோடி, மியன்மார் முஸ்லீம்களுக்கு ஆறுதல் சொல்வார் என எதிர்பார்க்கவும் முடியாது


இப்படித்தான் இலங்கையிலும் தமிழர் நிலை இருந்தது, 1965ல் மலையக தமிழர் நாடற்றவர்கள் என சிறீமாவோ அரசு விரட்டியபொழுது இந்தியா ஏற்றுகொண்டது.


பின் இன்று ரொஹிங்கியா மக்களை பர்மா அடிப்பது போல , 1980களில் ஈழத்தவரை இலங்கை நொறுக்கியபொழுது, உலகம் அதனை சுத்தமாக கண்டுகொள்ளாதபொழுது இந்தியா மட்டுமே களமிறங்கி அவர்களுக்காக பேசியது.


அந்த இனத்திற்கு ஒரு மாகாண அரசை நிறுவவும், மேலதிக இலங்கை தாக்குதலை தடுக்க அமைதிபடையினையும் அனுப்பியது.


பின் புலிகள் எல்லாவற்றையும் நாசமாக்கியது வேறுவிஷயம்


இன்றைய ரொஹிங்கிய மக்களின் நிலையும், அன்றைய ஈழ மக்கள் நிலையும் வேறல்ல. அவர்களைத்தான் அன்று இந்தியா காத்தது.


பின் புலிகளின் அட்டகாசத்திலே இந்தியா ஒதுங்கிகொண்டது, அதன் பின் புலிகளை அழிப்பது இலங்கைக்கு எளிதாயிற்று.


இன்று மறுபடியும் ஈழமக்களின் பிரச்சினை தொடங்கிய இடத்திற்கே சென்றுவிட்டது.


இதனை எல்லாம் எவ்வளவு சொன்னாலும் இந்தியா ஈழத்திற்கு துரோகம் செய்தது என சொல்லிகொண்டே இருப்பவனை ஒரு நாளும் திருத்தமுடியாது.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10