மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார்

download.jpgமுன்பு மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார், இப்பொழுது கவுரி லங்கேஷ் எனும் பெண் எழுத்தாளர் சுடபட்டிருக்கின்றார்.


இதில் கல்புர்க்கி கொலையில் அடிப்படைவாத இந்துத்வா சக்திகள் இருப்பதாக சொல்லபட்டது, இப்பொழுது இப்பெண் எழுத்தாளர் கொலையிலும் அதே பெயர் அடிபடுகின்றது.


தேசிய கட்சிகள் ஆட்சியில் இம்மாதிரி சில விஷயங்கள் நடக்கும் அபாயம் இருக்கும் போலும், மக்கள் உரிமைக்கான பிரச்சினைகளை எழுதுவர்கள் மீது தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டிதனம்




ஐ.எஸ், தாலிபான் ஆளும் நாடுகளில் நடக்கும் கொடூரம் இந்தியாவிலும் எட்டிபார்ப்பது முளையிலே கிள்ளி எறியவேண்டியது


என்ன கர்நாடக அரசு இது?


காவிரியில் கைவைத்தால் பொங்குகின்றார்கள், எழுத்தாளர்களை சுட்டுகொல்கின்றார்கள், சிறை கைதி ஹாயாக ஷாப்பிங் செல்ல முடிகின்றது, அறையினை நட்சத்திர ஹோட்டல் அறையாக மாற்றமுடிகின்றது


இப்படி ஒரு அலங்கோல ஆட்சி நடத்தும் அந்த மாநில அரசை ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள்?



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10