திமுக என்பது பூனை கருப்பா? இல்லை வெள்ளையா?

கொல்லைபுற வழியாக ஆட்சிக்கு வருவதை திமுக எப்போதும் விரும்பாது: மு.க.ஸ்டாலின்


கொல்லைபுறமாக வராதே தவிர, முன்பு டெல்லியோடு சேர்ந்து எல்லைபுறமாக வந்த வரலாறுகள் உண்டு.


திமுக என்பது பூனை கருப்பா? இல்லை வெள்ளையா? என கவலைபடும் கட்சி அல்ல, எப்படியும் எலியினை பிடித்தால் போதும் என திட்டமிடும் கட்சி.




அதனை விட மகா முக்கிய தந்திரம், கூட்டணி என ஒரு படையினை உருவாக்கி வெற்றிபெற்றபின் அவர்களை கொல்லைபுறமாக விரட்டி அடிப்பது என பல திட்டங்கள் உண்டு.


இவர் போகிற போக்கில் கட்சியினை சாமியார் மடமாக ஆக்கிவிடுவார் போலும், அட சாமியார்கள் கூட அட்டகாசமாக அதிரடி அரசியல் செய்யும் காலத்தில் இவர் நியாயம், நீதி என பேசிகொண்டிருந்தால் இன்னொரு நல்லக்கண்ணு ஆக முடியுமே தவிர, இன்னொரு கலைஞராக முடியாது



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10