ரஜினி என்ன சாதிபார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?



எங்கு போனாலும் இங்கு சாதி கூட வரும், அது என்னை கூட கொல்லும் : பா.ரஞ்சித்


ஏம்பா ரஞ்சித், எல்லா சாதியும் நடந்த சென்னை சாலையில்தான் நீரும் நடந்தீர், எல்லா சாதியும் சென்ற பேருந்தில்தான் நீரும் சென்றீர்.


எல்லா சாதியும் பொருள் வாங்கும் கடையில்தான் நீரும் வாங்கினீர், எல்லா சாதியும் புத்தகம் வாங்கும் கடையில்தான் நீரும் அம்பேத்கர் புத்தகம் எல்லாம் வாங்கினீர்.




எல்லா சாதியும் படித்த கல்லூரியில்தான் நீரும் படித்தீர், இப்பொழுது எல்லா சாதியும் இயங்கும் சினிமாவில்தான் நீரும் இருக்கின்றீர்.


எல்லா சாதி இயக்குநரும் இயக்கிய ரஜினியினை இப்பொழுது நீரும் இயக்குகின்றீர்?


இதில் எங்கு சாதி பெயரால் நீர் ஒதுக்கபட்டீர் அல்லது எங்கு சாதிபெயரால் உமக்கு வாய்ப்பு இல்லாமல் போனது?


மெட்ராஸ் படத்தில் கார்த்தி என்ன சாதிபார்த்தா நடித்தார்?


ரஜினி என்ன சாதிபார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?


நானும் ஒரு ஜாதிசங்க தலைவராக ஆசைபடுகின்றேன் என பகிரங்கமாக சொன்னால் என்ன? அதற்கு ஏன் இப்படி படு பயங்கரமான‌ பொய்?


ஜாதிகொடுமை நிறைந்த காலத்தில் தானாக எழும்பி வந்து அசைக்க முடியாத இடத்திற்கு சென்றாரே இளையராஜா, அவரை விடவா நீர் கிழித்துவிட்டீர்?


என்றாவது அந்த மனிதன் இப்படி அபத்தமாக உளறியிருப்பாரா?


கலைஞனின் திறமைக்கு சாதி, இனம், மதம் எல்லாம் தடையே இல்லை. உலகிற்கு புரிந்த‌ அந்த உண்மை ஏன் உமக்கு மட்டும் புரியவேயில்லை?


அதனை ஏன் மறைக்கின்றீர்? ஒரு ஜாதிசங்க தலைவராக இவ்வளவு ஆசையா?




 
















Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10