அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி




Image may contain: one or more peopleஅசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி


பெரியார் என்ன சொன்னார்?


"மோட்சம், நரகம், பாவம் , புண்ணியம், பரிகாரம் எல்லாம் மோசடிங்க . தேவர் அசுரர் என எல்லாமும் மோசடிதானுங்க.. அப்படி ஒன்றுமே இல்லைங்கே. எல்லாம் நம்மை அடிமைபடுத்தி அதன் மூலம் பார்ப்பான் நம்மை சுரண்ட செய்யபட்ட ஏற்பாடு, அதனால் நாம் நம்பகூடாதுங்க..





இந்த தீபாவளியே மோசடிங்க, சிந்தியுங்க...பூமி உருண்டைன்னு விஞ்ஞானம் சொல்லுதுங்க.. ஆனா இந்த நரகாசுரனுங்கிற பயல் அத பாயா சுருட்டினானுன்னு வேதம் சொல்லுதுங்க.. அது எப்படிங்க முடியும்

தீபாவளின்னா வியாபாரிக்கு லாபமுங்க, கோயில்ல மணியடிக்கிற பார்பானுக்கும் வேலைங்க.. ஆனா நமக்கு என்னங்க இருக்கு? வெட்டி செலவுங்க, அதனால நீங்க இதெல்லாம் சிந்திக்கணுமுங்க"

இப்படித்தான் சொன்னார் பெரியார். அதாவது தேவரும் இல்லை அசுரரும் இல்லை என்பது அவர் சொன்னது.

ஆனால் அவரின் சீடர் என சொல்லிகொள்ளும் வீரமணிக்கு, அசுரர் உண்டாம், அவருக்கு விழாவாம்

ஆக பெரியார் பொய் என சம்பவத்தை இவர் உண்மை என ஒப்புகொள்கின்றார், ஒப்புகொள்ளாவிட்டால் எப்படி அசுரன் திருவிழா என ஆரம்பிப்பார்?

கடவுள் இல்லையாம், ஆனால் அவரால் கொல்லபட்ட அசுரன் உண்டாம். முருகன் கிடையாதாம் ஆனால் அவனால் கொல்லபட்ட சூரபத்மன் உண்டாம். ராமன் கற்பனையாம், அவன் இலங்கைக்கு சென்றது கட்டுகதையாம் ஆனால் ராவணன் எனும் தமிழன் வாழ்ந்தது மட்டும் உண்மையாம்.

இதுதான் சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனையாம்.

இன்னும் என்னென்ன புதுபுது பகுத்தறிவுகளை சொல்லபோகின்றாரோ தெரியாது, ஆனால் பெரியாரின் கொள்கைகளை புதைக்க போகின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.

இனி பார்பணியம் ஏன் பெரியாரிசத்தை அழிக்கவேண்டும்? அதனைத்தான் வீரமணியே பார்த்துகொள்வார் போலிருக்கின்றதே

ஆக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்லீப்பர் செல்லாக இருந்திருக்கினறார் வீரமணி, அதுதான் இப்பொழுது வெளிவருகின்றது.













 






Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10