ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டின் தலைவிதியினை மாற்றி, அதனை ஒரு அடிமை மாநிலமாக மாற்றியதில் அதிமுகவின் பங்கு மிக பிரதானம்.
அது திமுகழகத்தை பலவீனபடுத்தவும், தேசிய கட்சியினை வளர்க்கவும் அது உருவாக்கபட்டது. ஆனால் விபரீத திருப்பமாக தேசிய கட்சியினை அழித்து அது வளர்ந்தது.
அதனால் தமிழகம் தேசிய கட்சி மாநிலமாகவும் இல்லாமல், முழு திராவிட மாநிலமாகவும் இல்லாமல் ஒரு பைத்தியக்கார மாநில அளவிற்கு சென்றது.
தமிழகத்திற்காக ஒரு துரும்பினையும் கிள்ளி போட்ட கட்சி அல்ல அதிமுக. வரலாற்றை புரட்டினால் தெரியும்.
எப்படி அது தேர்தலில் ஜெயிக்கின்றது என்பது அதிமுகவினருக்கே புரியாத ரகசியம்.
ராமசந்திரனாவது குற்றவாளி என தீர்ப்பு வருமுன்னே அந்த ரே கமிஷன் கலைக்கபட்டது, ஆனால் ஜெயா? நம்பர் 1 குற்றவாளி என தீர்ப்பே வாசிக்கபட்டிருக்கின்றது.
அந்த ஜெயாவிற்கு ஒரு சமாதி அதனை வணங்க ஒரு கூட்டம்.
ராமசந்திரனின் ஒரே சாதனை ஜெயாவினை உருவாக்கியது, ஜெயலலிதாவின் ஒரே சாதனை சசிகலாவினை உருவாக்கியது. இந்த இமாலய சாதனைக்குத்தான் அவர்களுக்கு இப்படி கல்லறைகள்.
அந்த ராமசந்திரன், ஜெயா சமாதிகள் எல்லாம் நிச்சயம் தமிழகத்தின் சாபகேடுகள், என்றாவது ஒருநாள் அது சுனாமியில் மூழ்காதா என்று பலர் எதிர்பார்த்ததுதான்
ஆனால் மாணவச்சுனாமியில் அது அடித்துசெல்லபட்டால் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லது.
"இனி அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடிக்கும்" : நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை
எல்லா இடத்திலும் போராட்டம் வெடித்த பின்பு, போராடும் கட்சிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபடுகின்றன என கவனமாக பார்த்தபின்பு, இனி எல்லோரும் கத்தும்போது கத்தினால் சிக்கல் இல்லை என வருகின்றார்கள் பார்த்தீர்களா?
இதுதான் அங்கிள் சைமனின் நுட்பமான பார்வை.
Comments
Post a Comment