கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கன்னட மாநிலம் கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செல்லலாம் : செய்தி


சின்னம்மா சிறையிருக்கும் வளாகத்தின் அருகே இவர்களை சிறைவைத்தால்தான் சரியாக இருக்கும் என்பது தினகரனுக்கு தெரிகின்றது, யாரும் முரண்டு பிடித்தால் கை காட்டி அதோ அந்த ரிசார்ட்டில்தான் சின்னம்மா இருக்கின்றார், வீடியோ எல்லாம் பார்த்திருப்பீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என மிரட்டலாம்


சின்னம்மாவிற்கும் ஷாப்பிங் செல்வது போல சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள‌ வசதியாக இருக்கும்.




இந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பின்னொரு நாளில் சின்னம்மா சிறையில் வாடும்பொழுது நாங்களும் அருகே நாங்களாக சிறையிருந்தோம் என சொல்ல வாய்ப்பாக இருக்கும்,


அந்த கன்னட அரசும் அதிமுக மீது ஒரு கருணையோடே இருக்கின்றது.


இப்படி பல வசதிகள் கர்நாடகாவில் இருக்கும்பொழுது பின்னர் ஏன் தினகரன் கோஷ்டி அங்கு செல்லாது?






அதிமுகவின் அனைத்து பிரச்னைகளுக்கும் செப்.12 பொதுக்குழுவில் தீர்வு: அமைச்சர் கடம்பூர் ராஜு


என்ன சொல்கின்றார் அமைச்சர்? அதிமுகவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இனி ஜெயலலிதா எழுந்து வருவது அல்லது கட்சியினை கலைத்துவிடுவது என்பதை தவிர எதுவும் சாத்தியமில்லை.


முதலாம் தீர்வு சாத்தியமில்லை, இரண்டாம் வாய்ப்பினை அமைச்சர் சொல்லியிருந்தால் தமிழகத்திற்கு மிக நல்லது.








Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10