நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார்

download.jpg


நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார்


தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி கிடைத்ததை வரவேற்கின்றோம், சக்திவாய்ந்த இந்த பதவி மூலம் ராமேஸ்வரம் மீணவர்களை வானதி காப்பாரா? அந்த கொடூரங்களுக்கு முடிவு கட்டபடுமா? என்பது இனிதான் தெரியும்


தமிழர் ஒருவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருக்கும் பொழுது அந்த எதிர்பார்ப்பு கூடவே செய்யும்.




ஆனால் கட்சிக்கு பெரும் உழைப்போ அல்லது பெரும் அடையாளமாகவோ இல்லாத நிர்மலா சீத்தாராமன், திடீரென உச்சம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.


பொன்னார் இனி பொற்காசு துறையினையும் பார்த்துகொள்வாராம், அதற்காக ப.சிதம்பரம் இடத்தினை பொன்னார் நிரப்புவார் என்றெல்லாம் எதிர்பார்க்கவா முடியும்?


ஆனாலும் நாட்டின் பொருளாதாரம் சரியும் நேரத்தில் பொன்னாரை நிதிதுறைக்கு மாற்றியிருக்கும் பாஜகவினருக்கு தைரியம் அதிகம்தானா? இல்லை பொன்னாரை விட்டால் ஆளில்லா நிலைக்கு சென்றுவிட்டார்களா என தெரியவில்லை.


ஆனால் பொன்னாரை நியமித்திருப்பதால் அவரை மனமார நம்புகின்றார்கள் என்பது புரிகின்றது, இனி பாஜகவின் நிலைபற்றி சொல்ல என்ன இருக்கின்றது, பரிதாபம் தான்.


இந்த இருவருக்கும் பதவி கொடுத்துவிட்டார்கள், ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் விழும் கல்லடி, சொல்லடிகளை எல்லாம் ஒற்றை ஆளாக தாங்கும் தமிழிசைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை


பாவம் தமிழிசை, அவருக்கு கொசு ஒழிப்புதுறையாவது கொடுத்திருக்க கூடாதா?



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10