வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது!

வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது! - சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ்


சுற்றுலா அரசுக்கு வருமானம் வரும் தொழில், பெரும் அந்நிய செலவாணியினை அது ஈட்டிகொடுக்கின்றது. பாரம்பரியமும் தாஜ்மஹால் போன்ற அழகான கட்டிடங்களும், கற்கோவில்களும் மாபெரும் கோட்டைகளும் அழகான இயற்கை காட்சிகளும் வெளிநாட்டவரை இந்தியாவிற்கு அழைக்கின்றன‌.


அதாவது புது இந்தியாவினை பார்க்க வரவில்லை, அந்த பழம் இந்தியா எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கின்றது என காண வருகின்றார்கள்




அவர்கள் நாட்டில் 500 ஆண்டுகள்தான் ஆக பழமை, கல் கோவில் எல்லாம் ஒன்றும் கிடையாது. அவர்கள் காண வருவது அதனைத்தான், அந்த பழமையினைத்தான். முன்னோர்கள் இத்தேசத்திற்கு விட்டு சென்ற சொத்து அவைகள்.


சுற்றுலா மூலம் உணவு, ஹோட்டல் தொழில், போக்குவரத்து , வியாபாரம் என இந்தியாவிற்கு வரும் பணம் ஏராளம்


அது இந்த அமைச்சருக்கு பிடிக்கவில்லை, ஏதோ வெளிநாட்டவர்கள் அங்கே வாழ வழியின்றி வருவது போலவும், அல்லது இங்கே இஸ்லாமியர் ஹஜ் பயணம் போல திருயாத்திரையாக வருவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்


அரேபியர் முதல் வெள்ளையர் வரை எல்லோருக்கும் மாட்டுகறியே பிரதானம், இதனை உணர்ந்து அரசும் வியாபாரத்திற்காக மாட்டை வெட்டலாம் என சொல்லியிருக்கின்றது.


இந்நிலையில்தான் அன்னார் இப்படி பேச தொடங்கிவிட்டார், இவர் கடந்தவாரம்தான் அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடதக்கது


ஒருவேளை இதனை கவனிக்கும் வெளிநாடுகள், இனி மாட்டுகறி தின்றால்தான் மோடிக்கு அனுமதி என சொல்லிவிட்டால் என்னாகும்?


மாதம் ஒருமுறை எங்காவது பறக்கவில்லையென்றால் கிறுக்கு பிடித்துவிடும் லெவலில் இருக்கும் மோடி, இப்படி வெளிநாடுகள் சொல்லிவிட்டால் கடலில் குதித்துவிடமாட்டாரா?


எப்படிபட்ட அறிவாளிகளை எல்லாம் இந்த பாஜக அமைச்சராக கொண்டிருக்கின்றது என்பதை கண்டால் பயமாகத்தான் இருக்கின்றது.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10