எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை

எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை


தமிழகம் பாஜகவினை பார்த்து சொல்லிகொண்டிருப்பதை , தமிழிசை தமிழகம் நோக்கி சொல்கின்றாராம்.


தமிழிசை பெரும் இலக்கியவாதியின் மகள், டாக்டர் கூட. அதனால் ஏதும் உள்குத்து இல்லாமல் பேசமாட்டார்.




அக்கா தமிழிசை, உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை நேரடியாக மோடியிடம் கேட்டால் என்ன? யாரையோ பார்த்து எங்கள் சகிப்பு தன்மையினை சோதிக்காதீர்கள் என ஏன் ஜாடையாக‌ கேட்க வேண்டும்?






நதிகளை மீட்க பயணம் தொடங்கினார் ஜக்கி சுவாமிகள்


அவரிடம் இருந்து மலையினை மீட்பது யார் என்ற கேள்விக்கு மட்டும் சுவாமி பதில் சொல்லமாட்டார்.






நீட் விலக்கு பெற என்னால் ஆன உதவி எல்லாம் செய்தேன் : நிர்மலா சீத்தாராமன்


நீங்கள் அமைச்சரானதிலே தெரிகின்றது அம்மையாரே, எவ்வளவு உதவிகள் செய்திருப்பீர்கள் என்று.






அனிதாவின் மரணத்திற்கு திமுக சிவசங்கர்தான் காரணம். மிரட்டி தற்கொலை செய்ய வைத்துள்ளார் - கிருஷ்ணசாமி


தாமிரபரணியில் 16 பேர் செத்தது, பரமக்குடி பக்கம் பலபேர் செத்தது எல்லாம் யாரால் என்பது உலகிற்கு தெரியாதா?


தன்னை போலவே எல்லோரையும் டாக்டர் எண்ணிக்கொள்வார் போல..







 

Comments

Post a Comment

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10