புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா?

எடப்பாடி அரசினை மிரட்டும் டெல்லி போல அமெரிக்காவினை மிரட்டிகொண்டிருக்கின்றது இர்மா சூறாவளி.


சில ரெய்டுகளை நடத்தி , அதிமுகவினை மிரட்டி வைத்திருப்பது போல ஏற்கனவே கரீபியன் தீவுகளில் வெறியாட்டம் ஆடிவிட்டு அது அமெரிக்கா பக்கம் நகர்கின்றது.


புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா? அது மிக முன்னெச்செரிக்கையாக ஏராளமான மக்களை இடம் கடத்திவிட்டது, இன்னும் ஏராளமான மக்களுக்கு கடும் முன் தயாரிப்புகளை செய்திருக்கின்றது




திக் திக் என நகர்கின்றது அவர்கள் நிமிடங்கள்


உலகில் எத்தனையோ நாடுகளில் அரசியல் சூறாவளி ஏற்படுத்தும் நாடுதான் அமெரிக்கா, ஆனால் இயற்கை எனும் சூறாவளியினை அதனால் தடுக்கவா முடியும்?


தென் சீனா சந்தித்த புயல்களை தொடர்ந்து, அமெரிக்க கண்டங்களுக்கு சோதனையான காலம், மெக்ஸிகோ நில அதிர்வால் பாதிக்கபட்டிருக்கின்றது, அமெரிக்கா சூறாவளியில் சிக்குகின்றது


இயற்கையின் முன்னால் மனிதன் உருவாக்கிய எல்லா வல்லரசுகளும் சும்மா டம்மிதான்



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10