குஷ்பூ ஏன் அமைதியானார்




Image may contain: 1 person, close-upகொட்டாத அருவினையும், ஒளிவிடாத நட்சதிரத்தினையும் காய்ந்துவிட்ட வயலினையும், தோகையில்லா மயிலினையும், கூவாத குயிலையும் , சீறாத சிங்கத்தையும் காண்பது ஒருவித கொடுமை.


அப்படி கொஞ்ச நாட்களாக அமைதியாகிவிட்ட குஷ்பூவினையும் நோக்கவேண்டியிருக்கின்றது.





என்ன ஆனதோ தெரியவில்லை. முதலில் டிவிட்டரில் இருந்து விலகினார், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைபடுத்துகின்றார்.

இப்பொழுது தமிழகமே கொந்தளிக்கும் விவகாரங்களில் அவர் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.

அவரின் இயல்பு இது அல்ல. தேனீ போல மகா சுறுசுறுப்பாக வலம் வந்த அவர், இப்படி அமைதியாவது சாத்தியமில்லை.

குஷ்பூ ஏன் அமைதியானார் என விளக்கவேண்டியது ஊடகதுறையினரின் பணி, ஆனால் அவர்கள் செய்யவில்லை.

ஆக அவருக்கு எதிராக எங்கோ சதிவலை பின்னபட்டிருக்கலாம், அல்லது சில சக்திகள் அவரை முடக்க நினைக்கலாம்

ஆனால் கோடான கோடி ரசிகர்களை கொண்ட இந்த மன்றம் எதற்கு இருக்கின்றது?

எல்லா சதிவலைகளையும் அறுத்தெறிந்து, அவரை மீட்டெடுக்க சங்கம் உறுதி எடுக்கின்றது.

"என்னம்மா ஆச்சு உங்களுக்கு? ..."













 




 


Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10