கோவை சோமலூர் பஸ்நிலையம் சரிந்து பலரை கொன்றிருக்கின்றது









நிலநடுக்கம் இல்லை, பெரும் மழையுமில்லை ஆனால் கோவை சோமலூர் பஸ்நிலையம் சரிந்து பலரை கொன்றிருக்கின்றது

இதுதான் பொறுப்பற்ற கொலை என்பது, பெரும் ஊழலில் தரமில்லா கட்டடத்தை கட்டியிருக்கின்றார்கள், அது பலரை கொன்றிருக்கின்றது.

உள்ளாட்சி அமைப்புக்களுக்கு பலர் போட்டியிடுவதும், பல கொலைகள் நடக்குமளவிற்கு அது தீவிர வெறியில் இருப்பதன் காரணம் இம்மாதிரி கட்டங்கள்தான்


ஆளாளுக்கு சுருட்டிய பணம் போக மீதியில் கட்டினால் இப்படித்தான் இருக்கும், கட்டடம் கட்டுவார்களே தவிர அதன் தரம் என்ன? ஒதுக்கிய பணம் முழுமையாக செலவளிக்கபட்டிருக்கின்றதா என ஒரு மண்ணாங்கட்டியும் சரிபார்க்க மாட்டார்கள்

இப்படி தமிழகம் முழுக்க வீணாக போகும் பணங்கள் கொஞ்சமல்ல, பேருந்து நிறுத்தம் உட்பட பல கட்டங்கள் இப்படி சுருட்டுவதற்காக கட்டபட்டு கைவிடபட்டு கிடப்பதை காண முடியும்

அவைகளில் பின் பேய்தான் தங்கும்

பேய்கள் ஆட்சி செய்தால் பேய்கள் தங்கத்தான் கட்டடம் கட்டுவார்கள், அதில் மனிதர்கள் நின்றால் அவை கொல்லத்தான் செய்யும்





 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10