மகளிடமிருந்து வந்த விபரீத கோரிக்கை

டிவியில் ஓடும் தமிழ் சினிமாக்களை கண்டு இதுவரை அதுபோல் டிரஸ் வேண்டும், பொம்மை வேண்டும் என சொல்லிகொண்டிருந்த மகளிடமிருந்து விபரீத கோரிக்கை வந்தது


டிவி சினிமாவில் ஒரு திருமணகாட்சி ஓடிகொண்டிருந்தது, சட்டென்று கேட்டுவிட்டாள்.


"அம்மா, நான் பெரிய ஆளா ஆனதும், காலேஜூக்கெல்லாம் போய் படிச்சு முடிச்ச பின்னாடி இது போல ஒரு பையனை வாங்கி தருவீங்களா?"




எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது, பாகம்பிரியாள் கொஞ்சமும் அதிர்ச்சியடையவில்லை அமைதியாக சொன்னாள்


"எனக்கு எங்கப்பா வாங்கி தந்த மாதிரி, நானும் உனக்கு வாங்கி தாரேம்மா, ஆனா கவனமா வாங்கணும் எங்கப்பா கொடுத்த காசுக்கு அவ்ளோ வொர்த்தா கிடைக்கலம்மா, அவர் ஏமாந்த மாதிரி நான் ஏமாற மாட்டேன்"


சரிம்மா, நல்லா பார்த்து வாங்குவோம் சரியா


சரிடா செல்லம்"



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10