மொத்தத்தில் 2 பயலும் பிராடுதான்..

அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டு எல்லா சாதியும் போராடுகின்றார்கள், ரஞ்சித் இப்பொழுது சாதியம் பேசுவது பைத்தியகாரதனம் : சீமான்


ஏம்பா சீமான், இப்படித்தான் 1987ல் கலைஞர் டெசோ என அழைத்தபொழுது வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பஞ்சாபியர்கள், பட்நாயக், மராட்டிய அரசியல்வாதிகள் உட்பட பலர் வந்து ஈழதமிழருக்கு ஆதரவாய் பேசினர் , போராடினர்


அதாவது அப்பொழுது இந்தியாவே ஈழ தமிழருக்கு ஆதரவாய் இருந்தது




1991ல் ராஜிவ் கொலைக்கு பின்புதான் அந்த ஆதரவு அற்று போயிற்று


ஆக இந்தியா ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு ஆதரவாக ஒன்றாக போராடியதா இல்லையா? அதற்கு காரணமாக கலைஞர் இருந்தாரா இல்லையா?


பின் ஏன் நீர் இந்தியா ஈழதமிழருக்கு துரோகம் செய்தது, கலைஞர் துரோகி என சொல்லிகொண்டிருக்கின்றீர்?


துரோகம் செய்தது இந்தியாவா? பிரபாகரனா?


ரஞ்சித் பைத்தியகாரதனமாக பேசுகின்றார் என நீங்கள் சொன்னால்? நீர் ஈழம் தொடர்பாக பேசுவது என்ன வகை?


ஆக மொத்தத்தில் 2 பயலும் பிராடுதான்..


சீமானிடம் கேள்வி கேட்பனும், சாதியினை ஒழிப்பேன் என சொல்லும் சீமானிடம், சாதியினை ஒழிக்க முயன்ற பெரியாரை நீர் வந்தேறி என சொன்னதேன் என கேட்கவில்லை


கேட்க தெரியாதவன் எல்லாம் சீமானிடம் கேள்வி கேட்கின்றான்.


பெரியார் அதனைத்தானே செய்தார், அவர் வழியில் கலைஞரும் செய்தார், பின் ஏன் நீங்கள் அவரை பழிக்கின்றீர்கள் என கேட்டால் சீமான் பேசமுடியும்?






இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி : சீமான்


இவர்தான் முன்பு பசும்பொன் தேவர் பெருமகனாருக்கும் அஞ்சலி செலுத்தியவர்.


ஆக கொல்லபட்டவருக்கும் மாலை. அக்கொலையில் குற்றம் சாட்டபட்டவருக்கும் மாலை




இதுதான் தமிழ்தேசியம். கொன்றவனும் செத்தவனும் தமிழனாக இருந்தால் பிரச்சினை இல்லை என்பதுதான் தமிழ் தேசியம்.









Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10