Posts

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்

Image
இது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்.  திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது. இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம் அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது. கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை. இதில் கமலஹாசன் என்ன? சாருஹாசன் கூட வரலாம். வந்து எப்படி மக்கள் வரவேற்பினை பெருகின்றார்கள் என்பதுதான் விஷயம். ஆனால் கமல் கட்சி நடத்துவதும் சாமான்ய விஷயம் அல்ல, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக கட்சி வளர்க்க முனைந்த வைகோ, மூப்பனார், விஜயகாந்த் எல்லாம் பட்டபாடு கொஞ்சம் அல்ல. அதுவும் மூப்பனாருக்கு பின்னபட்ட சதிவலைகள் கொஞ்சமல்ல, இன்றுவரை ரஜினி தயங்கி நிற்பதற்கு மூப்பானாருக்கு ஏற்பட்ட அந்த நிலையே காரணம். அதனை கண்ணால் கண்டவர் அவர். எனினும் ஒரு விஷயம் கவனிக்கதக்கது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வர டெல்லி உதவி இ

செப்டம்பர் 22, 2016

Image
காமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன். இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும் ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை அவர்கள் சமையல்காரரும் சொல்லவில்லை, அருகிலே இருந்த சசிகலாவு முழு பேட்டி கொடுக்கவுமில்லை இப்படி இன்னும் வெளிவராத ஆரம்ப தகவல்களே வராத நிலையில் வருடம் 1 ஆகின்றதாம். கோடான கோடி செல்வங்களையும், அரண்மனைகளையும் குவித்த ஜெயலலிதா, தனக்கு உண்மையாக அழ ஒருவரை கூட சம்பாதிக்காமல் போனதுதான் சோகம்

சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே

Image
அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும். போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது. உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது. சென்பகர

பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்...

Image
இந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன். அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன் எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது. ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக பார்கின்றார்கள். இது சீனர்களுக்கு பேய் மாதமாம், அவர்கள் வேறு பயந்துவிட்டார்கள். மனிதர் இப்படியா பெரும் சிக்கலை ஒருவனுக்கு உருவாக்குவார்?, சத்தியமாக ஜெயலலிதா ஆன்மா இவரை சும்மா விட கூடாது அப்படி என்ன சொல்லி விட்டார்?, அலுவலகத்தில் அல்லது முக்கியமான கூட்டத்தில் , துக்க வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம் அவர் சொன்னது இதுதான் ... ... .. "என்னை போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது"  

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4

Image
சிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும் என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது. அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும் முடியவில்லை, மொத்த ஐரோப்பா சேர்ந்தாலும் நடக்கவில்லை அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள், அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன, அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு அனுப்பினார்கள், ஏதோ கிளர்க் வேலை போல பார்த்துகொண்டிருந்தான் அது ஒப்புக்கு சப்பான வேலை, அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான் உண்மையில் அவன் மிக

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன் ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா? அது வரலாறென்றால், இந்த‌ வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு. மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?

இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்? ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள், என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம். ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்? மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன? அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள் மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை. மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது. பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம். அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவத